போலி பிம்பம்’ உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ? - மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய் திமுக-வின் ‘மிசா’ வரலாறு குறித்து ஒரு செய்கை செய்து பேசினார். இது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கேலி செய்வது போல் இருப்பதாகக் கூறி திமுகவினர் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு முதலமைச்சர் விஜய், தனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதே தவிர யாருடைய மனதையும் புண்படுத்தும் உள்நோக்கம் கொண்டதல்ல என்று விளக்கமளித்தார். இதற்கிடையே, மிசா காலத்தில் நடந்ததை விளக்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு வீடியோவை வெளியிட, அதற்குப் பதிலடியாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஐடி விங், "பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட ‘சிறை சென்ற தியாகி’ என்ற போலி பிம்பம் உடைந்ததால் பதற்றம் பற்றிக்கொண்டதோ?" என்று கேள்வி எழுப்பிக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.